Sunday, 10 January 2016

கோபண மன்றாடியார்

தென் பாண்டி நாட்டினிற் சிங்களர் தீமை செயச் செழியன்
முன்போ யகற்ற வலியற்ற காலத்தின் மொய்ம் பொடவர்
பின்போடத் தானை கொடுமோட்டு வீரன் பெருங் களந்தை 
மன்பூ வலனெனுங் கோப்பண னுங்கொங்கு மண்டலமே
(க-ரை) பாண்டி மண்டலத்திற் சிங்களர் புகுந்து வருத்துதலைத்
தடுக்கப் பாண்டியனுக்கு இயலாத காலத்தில், வலிய சேனையை நடத்தி
அச்சிங்களர் திரும்பி யோடச் செய்தவனுங் களந்தையென்னும் பதிக்குத்
தலைவனும், பூவலனென்னும் குடிப் பிறப்பனனுமான கோப்பணன்
என்பானுங் கொங்கு மண்டலம் என்பதாம்.

வரலாறு :- 

பாண்டி மண்டலத்தின் ஆளுகையைப் பற்றிப் பராக்கிரம பாண்டியனுக்குங் குலசேகர பாண்டியனுக்குஞ் சண்டை நேர்ந்தது. மனைவி மக்களுடன் பராக்கிரம பாண்டியனைக் குலசேகரன் நாசஞ் செய்துவிட்டான். இதனைக் கேள்வியுற்ற சிங்களத்தரசனான பராக்கிரம பாகு என்பான் தன் தண்ட நாயகனான இலங்காபுரியைப் பலத்த சைனியத்துடனனுப்பினான். அந்த இலங்காபுரி என்பான் இராமேசுவரத்தைப் பிடித்துக்கொண்டு சிலபாகத்தையும் அழித்து குந்துகாலம் என்னும் இடத்தில் ஒரு 
கோட்டைகட்டி பராக்கிரமபுரம் எனப் பெயரிட்டான். இவர்களை எதிர்த்த பாண்டியராஜன் - சுந்தரபாண்டியனெனும் இருபாண்டியர் களிறந்தார்கள். அப்பொழுது ராஜகேசரி ராஜாதிராஜன் கொங்கு நாட்டை ஆண்டிருந்தான். இவன் குலசேகர பாண்டியனுக்கு மாமன்முறை ஆகவேண்டும். இதனால் இந்தச்சோழனைக் குல சேகரபாண்டியன் துணை வேண்டியனான். உடனே கொங்கப் படையைத் திரட்டி அனுப்பப்பட்டது. இதுசென்று திருக்கானப் பேர் - தொண்டி - பாசி - பொன்னமராவதி - மணமேற்குடி - மஞ்சக்குடி 
என்னும் இடங்களிலெதிர்த்துச் சிங்களப் படைகளைப் பாண்டி நாட்டை விட்டுத் துரத்திவிட்டது. இந்தக் கொங்குப் படைக்குச் சேனாதிபதியாகச் சென்ற சேனாபதிகளுள் ஒருவனாக இக்கோப்பணன் சென்றதை இச்செய்யுள் விளங்குகிறது. 1898 சென்னை ஆர்க்கலாஜிகல் வருஷாந்த ரிபோர்ட்டிலும் காஞ்புரத்துக்கடுத்த ஆரம்பாக்கத்து  கோயிற் சாசனத்திலும் இப்படையெடுப்பு எழுதப்பட்டுள்ளது.

இந்த சண்டை கி.பி. 1190-ல் நடந்ததெனச் சாசன பரிசோதகர்கள் கணிக்கிறார்கள். எனவே இன்றைக்கு 730 வருஷங்களாகின்றன. இவன் மரபினர் பேரூர், அவிநாசியிலும் திருப்பணி செய்திருக்கிறார்கள்.இம்மரபினர் கோயமுத்தூர் ஜில்லாவில் புரவிபாளயம் (பாளயப் பட்டு) ஜமீன்தாராக இருக்கின்றனர். இவர்களைப் பாண்டிய ராஜாங்கத்தார் 

புத்திரவர்க்கமெனக் கொண்டு பல உரிமைகள் செய்திருக்கிறார்கள்.விஜயநகரம், மஹிசூர், மதுரை நாயக்கர் சமஸ்தானம், மலையாள சமஸ்தானங்களிலும் பல கவுரவங்கள் பெற்றிருக்கிறார்கள். கள்ளிக்கோட்டை ஆமீன் சாய்புக்குஞ், சீரங்கபட்டணம் நபாபுக்கும் நடந்த வாளையாற்றுச் சண்டையில் வழி மறிக்கப்பட்டது. அக்காலத்திற் புதியவழியை வெட்டிக் காட்டியதால் சந்தோஷப்பட்ட நபாபு உம்பளமாகச் சில கிராமங்கள் உதவினான்.

இம்முடி - மன்றாடி என்பன முதலிய பழய காலத்துப் பட்டங்களைப் பெற்றிருக்கிறார்கள். 'இம்முடி' ஜகமண்டலாதிபதி கோப்பண மன்றாடியார் என்பது இப்பொழுதுள்ளவர் பெயர்.

களந்தை = வாரக்க நாட்டிலுள்ள ஓரூர்.
பூவலர் = பூவலியர் - ஒரு ஜாதி. பூலுவரென்பாரு முளர் இவர்கள் 

குருகுருப்பிரிவினுள் பூவலியர் - மாவலியர் - காவலியர் - வேட்டுவர் 
வேடர் எனும் பஞ்சவருண வாளரச வகுப்பினர் என்பர்.

பூலுவ வேட்டுவ கவுண்டர்கள்

கொங்கு வேட்டுவ கவுண்டர் சமூகம் கோவை, ஈரோடு , நாமக்கல் , கரூர் மாவட்டங்களில் மிகுதியாகவும் , சேலம், திருப்பூர், திண்டுக்கல், ஊட்டி மாவட்டங்களில் குறுப்பிடதக்க அளவில் வாழ்ந்து வருகின்றனர். இச்சமுகம் சங்க காலத்தில் வேடர், வேட்டுவர், எயினர் மற்றும் மழவர் என்று குறிக்கப்பட்டனர் . வேட்டுவர் பின்வரும் ஐந்து பிரிவுகளாக சங்ககாலத்தில் அழைக்கப்பட்டனர் . 1.வேடர்( வேட்டுவ கவுண்டர் ),வேட்டுவர் ( வேட்டுவ கவுண்டர் ) ,பூவிலுவர்(பூலுவ வேட்டுவ கவுண்டர் ), மாவிலுவர் மற்றும் காவிலுவர். புராணங்களும், பழங்கதைகளும் வேட்டுவரை குருகுலத்தினர் எனக் கூறும். பாண்டவர், கெளரவர் ஆகியோர் குருகுலத்தவர்.இவர்கள் கொங்கு நாட்டின் பூர்வ குடிகள் என்பதற்குப் பலவிதமான ஆதாரங்கள் உள்ளன. சங்க இலக்கியங்களும், கல்வெட்டுகளும் இக்கருத்தை உறுதி செய்கின்றன. பல அறிஞர்களும் இக்கருத்தை ஆதரிக்கின்றனர்.

வேட்டுவ கவுண்டரின் பிற பெயர்கள்

வேட்டையாடுதலைத் தமது முதன்மைத் தொழிலாகக் கொண்டவர்கள் வேட்டுவர்கள். வேடர் என்ற சொல்லே வேட்டுவர் என் ஆயிற்று. இவர்கள் வேடன், வெற்பன், சிலம்பன், எயினன், ஊரன், வேட்டைக்காரன், வேட்டுவன், வேட்டுவதியரையன், ஊராளி மற்றும் நாடாழ்வான் முதலான பெயர்களாலும் அழைக்கப்பட்டனர். இவர்கள் கவுண்டர், காடவராயன், மன்றாடியார், பல்லவராயர், வானவதிராயன், காங்கயன், நாயக்கர், முத்தரையர், காடுவெட்டி, ராயர், வள்ளல், கொங்கு ராயர், ஊர்க்கவுணடர், கங்கதிராயர் மற்றும் பிள்ளை முதலான பட்டங்களைப் பெற்றிருந்தினர் என்பதனைக் கல்வெட்டுக்களால் அறியலாம். வேட்டுவ வேந்தர்களோ பல்லவராயர், பூவலராயர், சந்தனராயர் மற்றும் நரசிங்கராயர் முதலான பட்டப் பெயர்களைப் பூண்டிருந்தனர் என்பதனைக் குறிப்பு நாட்டுச் செப்பேட்டால் அறியலாம்.