கொங்கு வேட்டுவ கவுண்டர் சமூகம் கோவை, ஈரோடு , நாமக்கல் , கரூர் மாவட்டங்களில் மிகுதியாகவும் , சேலம், திருப்பூர், திண்டுக்கல், ஊட்டி மாவட்டங்களில் குறுப்பிடதக்க அளவில் வாழ்ந்து வருகின்றனர். இச்சமுகம் சங்க காலத்தில் வேடர், வேட்டுவர், எயினர் மற்றும் மழவர் என்று குறிக்கப்பட்டனர் . வேட்டுவர் பின்வரும் ஐந்து பிரிவுகளாக சங்ககாலத்தில் அழைக்கப்பட்டனர் . 1.வேடர்( வேட்டுவ கவுண்டர் ),வேட்டுவர் ( வேட்டுவ கவுண்டர் ) ,பூவிலுவர்(பூலுவ வேட்டுவ கவுண்டர் ), மாவிலுவர் மற்றும் காவிலுவர். புராணங்களும், பழங்கதைகளும் வேட்டுவரை குருகுலத்தினர் எனக் கூறும். பாண்டவர், கெளரவர் ஆகியோர் குருகுலத்தவர்.இவர்கள் கொங்கு நாட்டின் பூர்வ குடிகள் என்பதற்குப் பலவிதமான ஆதாரங்கள் உள்ளன. சங்க இலக்கியங்களும், கல்வெட்டுகளும் இக்கருத்தை உறுதி செய்கின்றன. பல அறிஞர்களும் இக்கருத்தை ஆதரிக்கின்றனர்.
வேட்டுவ கவுண்டரின் பிற பெயர்கள்
வேட்டையாடுதலைத் தமது முதன்மைத் தொழிலாகக் கொண்டவர்கள் வேட்டுவர்கள். வேடர் என்ற சொல்லே வேட்டுவர் என் ஆயிற்று. இவர்கள் வேடன், வெற்பன், சிலம்பன், எயினன், ஊரன், வேட்டைக்காரன், வேட்டுவன், வேட்டுவதியரையன், ஊராளி மற்றும் நாடாழ்வான் முதலான பெயர்களாலும் அழைக்கப்பட்டனர். இவர்கள் கவுண்டர், காடவராயன், மன்றாடியார், பல்லவராயர், வானவதிராயன், காங்கயன், நாயக்கர், முத்தரையர், காடுவெட்டி, ராயர், வள்ளல், கொங்கு ராயர், ஊர்க்கவுணடர், கங்கதிராயர் மற்றும் பிள்ளை முதலான பட்டங்களைப் பெற்றிருந்தினர் என்பதனைக் கல்வெட்டுக்களால் அறியலாம். வேட்டுவ வேந்தர்களோ பல்லவராயர், பூவலராயர், சந்தனராயர் மற்றும் நரசிங்கராயர் முதலான பட்டப் பெயர்களைப் பூண்டிருந்தனர் என்பதனைக் குறிப்பு நாட்டுச் செப்பேட்டால் அறியலாம்.
No comments:
Post a Comment